தெலுங்கானா மாநிலத்தில் கணவர் ஒருவர் பெண்ணின் உடல் எடையை குறைக்க இந்த உணவு முறையை பின்பற்ற சொல்லி துன்புறுத்தியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து செய்துகொண்டார்.
தெலுங்கானா மாநிலம், மேச்சல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சிவகுமார். இவரின் மனைவி ஸ்ரீலதா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவகுமார் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சிவகுமார் தன் மனைவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மனைவி மிக குண்டாக இருப்பதால் உடல் எடையை குறைக்க சொல்லி அடிக்கடி சண்டை போட்டதாகவும், உடல் எடையை குறைப்பதற்காக பெண்ணின் பெற்றோரிடம் 5 லட்சம் வாங்கி வா என்று துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விரக்தி அடைந்த ஸ்ரீலதா ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.