குர்கான் நகரில் மழையினால் மரத்தடியில் ஒதுங்கிய கும்பல் மீது மின்னல் தாக்கி சிலையாக சரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
குர்கான் நகரில் உள்ள செக்டர் 82 வில் மழையில் நனையாமல் இருப்பதற்காக நான்குபேர் ஒரு மரத்தை சுற்றி நின்று கொண்டுள்ளனர். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதால் 4 பேரும் அப்படி சிலையாக சரிந்து விழுந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது.
https://twitter.com/NewsMobileIndia/status/1370590906403876867
மேலும் அந்த நான்கு பேரில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.மற்றொருவர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் ,மீதமுள்ள இரண்டு பேரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.