Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஒரு மாசம் தான் ஆகுது…. அதுக்குள்ள இப்படியா….? வரதட்சணை கொடுமையால் உயிரை விட்ட பெண்…!!

புதுச்சேரியில் திருமணமான ஒரு மாதத்திலேயே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதிகள் ஏழுமலை (வயது 33) – சிவபாக்கியம் (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் சிவபாக்கியத்திடம் அவரது கணவர் அடிக்கடி வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த  சிவபாக்கியம் இது குறித்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியம் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது ஏழுமலை அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து சிவாபாக்கியத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த  அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அங்கு சிவபாக்கியம் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிவபாக்கியத்தின் உறவினர்கள் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து  காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |