Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பலி.. இந்த நாட்டில் தற்போது தான்.. கொரோனாவின் முதல் உயிரிழப்பு..!!

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா கொரோனாவின் முதல் உயிரிழப்பை பதிவு செய்துள்ளது.  

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனாவால் பல  லட்சம் உயிர்கள் பறிபோனது. மேலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மீண்டும் பல நாடுகளில் கண்டறியப்பட்டு அதனை தடுக்க தடுப்பூசி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்போடியா, தென்கிழக்கு ஆசிய நாடான இதில் 50 வயதுடைய ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனை அந்நாட்டின் சுகாதார துறை கொரோனாவின், முதல் உயிரிழப்பை பதிவு செய்துள்ளது.

அதாவது இவர் துறைமுகத்தில் பணியாற்றும் சீன நாட்டைச் சார்ந்த ஒருவருக்கு ஓட்டுனராக பணியாற்றியதால் இருவருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது சுமார் 1,200 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் சீனாவைச் சேர்ந்த மக்கள் 4 பேர் ஹோட்டலில் தனிமைப்படுத்துதல் விதியை மீறியுள்ளார்கள்.

இதனால் தான் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் பிறகு கம்போடியா நிர்வாகம் புதிய விதிமுறைகளை கையாண்டதோடு அனைத்து பள்ளிகளையும் மூடியது. மேலும் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படும் பொது இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

Categories

Tech |