Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு நேர்காணல்.. மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த ஹரி-மேகன் தம்பதி.. வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு மக்கள் ஆதரவு மிகவும் குறைந்துள்ளதாக கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.  

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்பிரேயின் நேர்காணலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நேர்காணலில் ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தின் மீது அதிகமான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

இதனால் பிரிட்டன் மக்களில் பெரும்பாலானோர் ஹரி-மேகன் தம்பதிக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர். அதாவது இவர்களின் நேர்காணல் ஒளிபரப்பான பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் சுமார் 1,664 மக்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இளவரசர் ஹரிக்கு மக்கள் ஆதரவு 15 புள்ளிகள் சரிந்து தற்போது -3 புள்ளியில் உள்ளது.

மேகனிற்கு மக்கள் கொடுத்த ஆதரவு -27 ஆனது. அதாவது ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து விலகிய பின்பு அவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அளித்த அந்த ஒரு நேர்காணலால் அனைத்து ஆதரவையும் இழந்ததாக தெரியவந்திருக்கிறது.

எனினும் பிரிட்டன் மக்களில் 18 முதல் 24 வயதுடைய நபர்கள் சுமார் 55 %பேர் மேகன் கருத்துக்களுக்கு தங்களின் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் 65 வயதிற்கு மேற்பட்ட பிரிட்டன் மக்கள் சுமார் 85% பேர் மேகனை வெறுக்கிறார்கள். மேலும் பிரிட்டனில் 5 நபர்களில் 4 பேர் மகாராணியாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எனினும் மகாராணியாரின் நடவடிக்கைகள் சுமார் 14% நபர்கள் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |