கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 597 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்விஸ்மெடிக் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் பைசர் மற்றும் மாடர்னா என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு ஸ்விஸ்மெடிக் ஒப்புதல் அளித்து மக்களுக்கு செலுத்திவருகின்றது. இதனிடையே கடந்த மார்ச் 8ம் தேதி வரை கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொண்டவர்களில் எத்தனை பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது? என்பது குறித்த ஆய்வில் ஸ்விஸ்மெடிக் ஈடுபட்டுள்ளது.
இந்த ஆய்வில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 597 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 70% பேர் பெண்கள் என்ற தகவலை ஸ்விஸ்மெடிக் வெளியிட்டுள்ளது. ஆனால் ஆபத்தான நிலையில் ஒருவரும் இல்லை என்று தரவுகளை சுட்டிக்காட்டிய ஸ்விஸ்மெடிக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 24 பேருக்கு காய்ச்சலும், 18 பேருக்கு மூச்சுத்திணறலும், 16 பேருக்கு மறுபடியும் கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் 21 பேர் பல்வேறு இடைவெளிகளில் இறந்துள்ளதாகவும் ஸ்விஸ்மெடிக் ஆணையம் தகவலை வெளியிட்டுள்ளது.