மயிலாடுதுறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் மழையின் காரணமாக நாசமான வேதனையில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடைகாரமூலை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயி. கிருஷ்ணமூர்த்தி கடன்வாங்கி 4 ஏக்கர் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளார். மழையின் காரணமாக சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிட்டது. இதனால் கிருஷ்ணமூர்த்தி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8000 வீதம் அரசு சார்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிவாரணத்தொகை சில விவசாயிகளுக்கு கிடைக்கவில்லையாம்.
கிருஷ்ணமூர்த்திக்கு ரூ. 4000 மட்டுமே நிவாரண தொகையாக வரவு வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விவசாய சங்க பிரதிநிதிகள், பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.