Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளம் மாதிரி தேங்கி கிடக்கு… சீக்கிரம் நடவடிக்கை எடுங்க… மயிலாடுதுறையில் பொதுமக்கள் சாலை மறியல்..!!

மயிலாடுதுறையில் சாலைகளில் குளம்போல் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டம் 2007-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப் படாததால் ஆங்காங்கே குழாய்கள் வெடித்து பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதில் ஆரோக்கியநாதபுரத்திற்கு பிரிந்து செல்லும் சாலையில் அதிக அளவு சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இந்த கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் தொற்றி நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையடுத்து இந்த கழிவுநீர் குழாய்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கும்பகோணம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த கழிவு நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |