திண்டுக்கல் நிலக்கோட்டையில் மர்மமான முறையில் சரக்கு வேன் டிரைவர் மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.குரும்பட்டியில் சென்றாயன் என்பவர் வசித்து வந்தார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று சென்ராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் அழைத்து வந்து அவரது உடலை கீழே இறக்கினார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் சென்றாயனின் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்றாயனின் வீட்டில் ஆங்காங்கே ரத்தக் கரைகள் கிடந்துள்ளது. மேலும் அவரின் தலையில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.