Categories
அரசியல் பல்சுவை

இருமுனை தாக்குதல் : அதிமுக-விற்கு செக் வைத்த டிடிவி….. திணறும் எடப்பாடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விவசாயம், கால்நடை வளர்ப்பு, தீப்பெட்டி உற்பத்தி முக்கியத் தொழில்களாக உள்ளன. கோவில்பட்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 900 இருக்கிறார்கள். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் மூன்று முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இங்கு திமுக ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடையாது. மேலும் அதிமுக நான்கு முறை வெற்றி பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக கடைசி 3 தேர்தல்களில் அதிமுக தொடர் வெற்றியை பெற்று  தற்போதைய கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர்  கடம்பூர் ராஜு இருக்கிறார். ஆனால் கடந்த தேர்தலில் மிகக்குறைந்த வாக்குவித்த்தியாசத்தில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. எனவே அதிமுகவை இம்முறை கோவில்பட்டியில் தோற்கடிக்க, கடம்பூர் ராஜுக்கு நிகரான போட்டியாளராக டிடிவி தினகரன் களமிறங்கியிருக்கிறார்.

இவர் 2017 இல் நடைபெற்ற ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக  போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி சட்டமன்றத்திற்கு சென்றார். அந்த அளவிற்கு செல்வாக்கு மிகுந்தவர். ஆனால் தற்போது பழக்கமே இல்லாத கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட இருப்பது அவர் முன்னரே எதோ கணக்கு போட்டு வைத்து தான் போட்டியிட இருக்க்கிறார் என்று கூறப்படுகின்றது.

இதனால் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி கோவில்பட்டி தொகுதியில் அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் என்று பேசப்பட்டு வருகின்றது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவில் தற்போது இருக்கக்கூடிய அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிக்க வேண்டும் என நினைத்து வேட்ப்பாளர்களை தேர்வு செய்து களமிறக்கவுள்ளார். இது ஒருபுறமும், மறுபுறம் அமமுகவினர் என அதிமுகவை திணறடித்து வருகின்றனர்.

Categories

Tech |