Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள ’99 ஸாங்ஸ்’… படத்தின் முக்கிய அப்டேட்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள ’99 ஸாங்ஸ்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் ’99 ஸாங்ஸ்’. இந்த படத்தை விவேக் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் இஹான் பாத் மற்றும் எடில்சி வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்டை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் ’99 ஸாங்ஸ்’ படம்  வருகிற ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |