அமெரிக்காவில் ஓப்ராவின் ப்ரோ முன்னெடுத்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி – மேகனிடம் கேட்க மறந்த கேள்விகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி – மேகன். இவர்கள் அரசு குடும்பத்திலிருந்து விலகி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஓப்ராவின் ப்ரோ முன்னெடுத்த நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளனர். இந்த நேர்காணல் ஒளிபரப்பான நிலையில் இவர்களிடம் கேட்க மறந்த கேள்விகளின் பட்டியல்களை ஓப்ரா வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் தாங்கள் அரச குடும்பத்தில் உறுப்பினராக இல்லாத போது இங்கிலாந்து மக்களின் வரிப்பணத்திலிருந்து உங்களின் பாதுகாப்புக்காக ஏன் செலவிடுகிறீர்கள்?.
மேலும் பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்துவழங்கப்பட்ட நிதிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக சொல்றீங்கள் அப்படி என்றால் ஏன் உங்களுக்கு 21 வயது மற்றும் 30 வயதில் இளவரசி டயானாவின் சொத்துக்களில் இருந்து பல பில்லியன் பவுண்டு சொத்துக்கள் வழங்கப்பட்டது?. அரச குடும்பத்தின் மூலம் வரும் ஆடம்பரங்கள் எதுவும் தங்களுக்கு தேவை இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் எதற்க்காக அதன்படி நடக்கவில்லை? மேலும் அரண்மனையில் கைதிபோல் இருந்ததாக மேகன் கூறியுள்ளார்.
ஆனால் அவர் அரண்மனையில் இருந்த சமயத்தில் பல்வேறு வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரச குடும்பத்தின் தற்போதைய சட்டங்கள் படி ஹரியின் பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டம் அளிக்கப்படாது என்று மேகனுக்கு உண்மையில் தெரியாதா? மேலும் சுற்றுச் சூழலுக்கு ஆதரவளித்து வரும் நீங்கள் ஏன் அடிக்கடி தனிப்பட்ட விமானப் பயணங்களை மேற்கொள்கிறீர்கள்?.
அதுமட்டுமின்றி அரசவம்சம் கொடுத்த நெருக்கடியால் சாகும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறும் மேகன் ஏன் அந்த நேரத்தில் கணவரையோ அல்லது தாயாரிடமும் உதவி கோரவில்லை? போன்ற கேள்விகளை ஹரி – மேகன் தம்பதியிடம் கேட்க மறந்துள்ளதாக ஒப்ராவின் ப்ரோ அறிவித்துள்ளார்.