சிவகங்கை இளையான்குடி அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வழக்காணி கிராமத்தில் பூமிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சில நாட்களாக பூமிநாதன் உடல்நிலை குறைபாட்டினால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பூமிநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு பூமிநாதன் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.