Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாளில் ஆர்யா-சாயிஷா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்… குவியும் லைக்ஸ்…!!!

இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் ஆர்யா- சாயிஷா ஜோடி தங்களது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் ஆர்யா- சாயிஷா தம்பதிகள் தங்களது அழகிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

நடிகை சாய்ஷா வெளியிட்டுள்ள புகைப்படத்துடன் ‘என்னுடைய அன்பு கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் . அவரை என்றும் நான் நேசிப்பேன்’ என பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள புகைப்படத்துடன் ‘என்னுடைய ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக்கிய எனது மனைவிக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அழகிய புகைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் லைக்குகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |