Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் இணைப்பைப் பெறுவது…” இனி ரொம்ப ஈஸி”… மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்..!!

புதிய சிலிண்டர் பெறுவதில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

உள்ளூர் வீட்டு சான்றிதழ் இல்லாமல் புதிய எல்பிஜி இணைப்பை பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர்களில் இருப்பவர்கள் மற்ற நகரங்களுக்கு வேலைக்கு சென்றால் அந்த பகுதியில் இருப்பிட சான்று இருக்காது. இதனால் எல்பிஜி சிலிண்டர்களை வாங்குவது கடினம். தற்போது மத்திய அரசு குடியிருப்பு சான்றிதழ் இல்லாமல் உங்கள் வீட்டு ஆவணங்கள் மற்றும் வைத்து எல்பிஜி இணைப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய சிலிண்டர் இணைப்பு பெறுவது மிகவும் எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்பிஜி சிலிண்டர்கள் தொடர்பான விதிகளை அரசாங்கம் மாற்றி வருகிறது. புதிய விதிகள் மூலம் டீலர்களிடம் இருந்து மூன்று எரிவாயு பெற முடியும் என்று கூறியுள்ளது.  இந்த புதிய விதியின்படி வாடிக்கையாளர்கள் ஒரு வியாபாரிக்கு ஒரே நேரத்தில் மூன்று சிலிண்டர்களை வழங்க முடியும்.

Categories

Tech |