Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு..! குழந்தை உட்பட 39பேர் பலி…. துனிசியாவில் அரங்கேறிய சோகம் …!!

செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதால் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறிய 39 பேர் உயிரிழந்துள்ளனர். கடலில் மிதந்த அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய காவல்படை தெரிவித்துள்ளது .39 சடலங்களை கடலோர காவல் படை குழுக்கள், தன்னார்வ மீன்பிடி படகுகளை  கடற்பறை கண்டுபிடித்துள்ளது.

மேலும் மற்றொரு படகும் அதே பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில இரு கப்பல்களில் இருந்தும் மொத்தம் 165 மக்கள் மீட்கப்பட்டு  sfax  மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக துனிசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பலர் அந்த கப்பலில் இருந்து தப்பித்து இருக்கலாம் அல்லது கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம். அதனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி தேடும் பணி ஆரம்பிக்க வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2 படகுகளும் இத்தாலிக்கு சென்றுகொண்டிருந்தது .

அதில்  பெரும்பாலானோர் துணை சஹாரா ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள்.அவர்கள் அந்த பாழடைந்த படகில் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று துனிசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

Categories

Tech |