நடிகை பூர்ணா நான் முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான ஆடுபுலி, முனியாண்டி, அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,”நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அப்போது கூறியதாவது, பெண்கள் தியாகத்தின் மறு உருவம். எல்லா துறையிலும் முன்னேறி வருகின்றனர்.
ஆண்களுக்கு சமமான உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பெற்றோர்கள் சிறுவயதிலேயே அறிவுரை சொல்லி கட்டுப்பாட்டில் வைக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் ஆண்களுக்குத்தான் சொல்லித்தர வேண்டும். சினிமா துறையிலும் கூட பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. 15 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கிறேன். ஆனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.