பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததற்காக ஜோ பைடன் அரசின்மீது 12 மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
உலகை பயம் கொள்ள வைக்கும் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு கடந்த 2௦15ம் ஆண்டு உலக நாடுகள் ஒன்று கூடி பாரிஸ் ஒப்பந்தம் கொண்டுவந்தன. இதில் முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா முதல் ஆளாக அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இணைகிறது என்று கையெழுத்திட்டார். பிறகு அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றத்தில் டிரம்ப் பொறுப்பேற்றபோது இது வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்று கூறி பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேருகிறது என்று கூறி 2017 ஆம் ஆண்டு அறிவித்து, 2019ஆம் ஆண்டு முறைப்படி பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.
தற்போது புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைவதாக அறிவித்தார். அதன்படிகடந்த மாதம் 19-ந்தேதி பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது. அதிபர் ஜோ பைடன் இந்நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீரழிக்கும் என்று மாகாணத்தில் அட்டர்னி ஜெனரல் ஏரிக் ஸ்மித் தலைமையில் ஆர்கன்சாஸ், அரிசோனா, இண்டியானா, கன்சாஸ், மென்டோனா, நெப்ராஸ்கா, ஓஹியோ, ஒக்லஹோமா, தெற்கு கரோலினா, டென்னிசி மற்றும் உட்டா ஆகிய 12 மாகாண அரசுகள் சேர்ந்து வழக்கு தொடர்ந்தனர். ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக 12 மாகாண அரசுகள் செய்து வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.