Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜாவா..? ஜிவி பிரகாஷா..? செல்வராகவன் விளக்கம்…!!

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் யார் இசையமைப்பாளர் என்ற கேள்விக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பெரும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருந்தார். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த செல்வராகவனிடம், ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாரா? அல்லது யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த செல்வராகவன் “இருவருமே எனது நண்பர்கள். இதில் யார் இப்படத்தில் பணியாற்ற விரும்புகிறார்கள் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இது அவர்களின் பணிச்சுமை பொருத்து அமையும்” என்று விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |