நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா ,விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் .
தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் காயிதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சர்க்காரு வாரி பட்டா , ரங் டே ஆகிய தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள கீர்த்தி ,தனக்கு திருமணம் செய்து கொள்ள நேரம் இல்லை என்றும் , அந்த மாதிரி எந்த திட்டமும் இல்லை எனவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.