Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா 40’ படத்தில் இவர்தான் வில்லனா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சூர்யா 40 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

பாண்டிராஜ் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் வினய்?

மேலும் இந்தப் படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். விரைவில் அவர் சூர்யா 40படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வினய் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |