சர்வதேச திரைப்பட விழாவிற்கு கட்டில் திரைப்படம் தேர்வாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டுதோறும் அரசாங்கம் நடத்தும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்த விழாவில் உலகெங்கும் இருக்கும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். அந்த வகையில் இ.வி.கணேஷ்பாபு இயக்கிய “கட்டில்” திரைப்படம் தேசிய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.பி.கணேஷ் பாபு கூறியதாவது, “கட்டில் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சந்தோஷ தருணத்தில் இப்படத்தின் உருவாக்கம் குறித்த ஒரு நூலை வெளியிடுகிறேன்.
கட்டில் திரைப்படத்தில் சினிமா தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு கொடுத்த சாதனையாளர்கள் நடித்துள்ளனர். வைரமுத்து மற்றும் மதன் கார்க்கிக் எழுதிய இப்படத்தின் பாடலுக்கு ஸ்ரீகாந்த்தேவா இசை அமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் பாடல் வெளியீடு கூடிய விரைவில் வெளியிடப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.