ராம்பூரில் பெண் ஒருவர் தான் காதலித்த நான்கு பேரில் ஒருவரை திருமணம் செய்ய சீட்டு குலுக்கி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர் மாவட்டத்திலுள்ள தாண்டா அஜீம்நகர் பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண் அப்பகுதியில் உள்ள 4 இளைஞர்களை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அப்பெண் நான்குபேரையும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து ஐவரும் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர். இரண்டு மூன்று நாட்களாக ஐவரும் வீட்டிற்கு வராததால் பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்ய முடிவு எடுத்தனர்.அதன் பிறகு அந்த ஊரின பஞ்சாயத்து தலைவர்கள் போலீஸிடம் செல்ல வேண்டாம் என்று கூறி இந்த சிக்கலுக்கு அவர்களே முடிவு எடுப்பதற்காக அனைவரையும் அழைத்தனர்.
அப்பெண்ணிடம் நால்வரில் உனக்கு யாரை பிடிக்கிறதோ அவரை உனக்கு திருமணம் செய்து தருவதாக கூறினார்கள் . ஆனால் அதற்கு அப்பெண் எனக்கு நால்வரையும் பிடித்து இருப்பதாகவும் ஒருவரை மட்டும் என்னால் தேர்வு செய்ய முடியவில்லை எனவும் கூறினாள் . குழப்பமடைந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஒரு சிறுவனை அழைத்து நால்வரின் பெயரையும் துண்டுச் சீட்டில் எழுதச் சொன்னார். அதில் ஒரு சீட்டை அந்தப் பெண் எடுக்க வேண்டும் என்றும் அதில் எந்த நபரின் பெயர் வருகிறதோ அவரையே பெண்ணுக்கு திருமணம் செய்து தருவதாகவும் கூறப்பட்டது.