சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.
பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டாக்டர்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.
ஆனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் திரைப்படத்தை வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து படத்தை இயக்கிய கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்டர் படத்தை மார்ச் 26ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் நலன் கருதி தற்போது படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம். கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். தங்கள் காத்திருப்புக்கு மதிப்புடைய படமாக டாக்டர் திரைப்படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.