உங்கள் தொகுதி உண்மை நிலவரத்துல அடுத்து நம்ம பாக்கபோறது பெருந்துறை சட்டமற்ற தொகுதி. ஈரோடு மாவட்டத்துல ஒரு பகுதியும், திருப்பூர் மாவட்டத்துல ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதியை உள்ளடக்கியது தான் இந்த பெருந்துறை சட்ட மற்ற தொகுதி. பெரும்பான்மை வறட்சியான விவசாய நிலப் பகுதிகளையும், அதிக கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களையும் கொண்ட தொகுதி பெருந்துறை ஆகும். ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான சிப்காட் இந்த தொகுதியின் அடையாளம்.
1967 முதல் இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த தொகுதியில் அதிமுக 7 முறையும், அதிமுகவில் ஜெயலலிதா அணி ஒரு முறையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 முறையும். சம்யுக்த சொசைட்டி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாச்சலம் 80,292 வாக்குகள் பெற்று வென்றார். இந்தத் தொகுதியில் மொத்தம் 2,23,51 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.
பெருந்துறை தொகுதியை பொறுத்தவரையில் தொழில் வளர்ச்சியில் சிப்காட் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அதை விட பலமடங்கு சுற்றுச்சூழலில் பிரச்சினைகளால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலம், நீர், காற்று மாசுபாட்டால் சிப்காட்டை சுற்றிலும் 10 கிலோ மீட்டர் கிராம மக்கள் இன்னல்களை இன்றளவும் சந்தித்து வருகின்றனர். 50 ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் சேர்க்கப்படாததாது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை அதிகரித்த போதிலும் இன்னும் பெருந்துறை பேரூராட்சி உள்ளது
. இதனை ஒட்டி அமைந்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பேருராட்சியையும் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை. பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தியில் இந்திய அளவில் புகழ் பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து தொழிலை மேம்படுத்தவும் புவிசார் குறியீடு வழங்கவும் வலியுறுத்தி வருகின்றனர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர்.
தோப்பு வெங்கடாசலம் தனது தனிப்பட்ட அலுவலகத்தை மட்டுமே பயன்படுத்தி வருவதால் பெருந்துறையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மரம் செடி படர்ந்து அடர்ந்த வனம் காட்சியளிக்கிறது. இந்த அலுவலகத்தில் அமர்ந்து அலங்கரிக்கப் போகும் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் யார் என்பதை அடுத்த சில மாதங்களில் இந்த தொகுதி மக்கள் தீர்மானிக்கவுள்ளனர்.