Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சித் தகவல்…. பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா…. ரசிகர்கள் வருத்தம்…!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் மறைந்த பாலிவுட் நடிகரான ரிஷி கபூரின் மகன் ஆவார். தற்போது இவர் தனது தாய் நித்து கபூருடன் மும்பையில் வசித்து வருகிறார். மேலும் அவர் தன் காதலியான பாலிவுட் நடிகை ஆலியா பட்டை இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று பரவியிறிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அதனால்  அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் ரன்வீர் தற்போது மருத்துவர்களின் ஆலோசனையுடன் தன் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அவர் உடல்நலம் மெல்ல மெல்ல தேறி வருகிறது என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |