Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களுக்காக சீமான் மட்டுமே இருக்கிறார் – உலகளவில் கிளம்பும் ஆதரவு …!!

கனடாவில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மாதவன் சக்திவேல் என்பவர் தேர்தல் தொடர்பாகவும் , சீமான் குறித்தும் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிற நிலையில் அவருக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். சீமான் நாட்டிற்கு தேவை என்று கனடா நாட்டில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாதவன் சக்திவேல் கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட் பதிவிட்டுள்ள அவர்,  வீடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு பணம் அளிக்க வேண்டும்.

அதேபோன்று நாடு நலனுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணன் சீமானுக்கு பணம் அளிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியது நான் சம்பாதிக்கிற பணத்தை தான் அவருக்கு கொடுக்கிறேன். இது என் மனைவி, பிள்ளைகளுக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த தேர்தல் நேரத்தில் திமுக கட்சியெல்லாம் நிதி என்று வெளிப்படையாகவே வசூலிக்கிறார்கள். அதே போன்று எங்கள் அண்ணன் சீமான் இருக்கும் பொது நாங்கள் உதவி செய்ய மாட்டோமா ? என்று கூறியுள்ளார்.

Categories

Tech |