Categories
உலக செய்திகள்

வெடிபொருள்களை கையாள்வதில் அலட்சியம்…. 20 பேர் பலி, 600 பேர் காயம்…. கினியாவில் சோகம்…!!

கினியா நாட்டில் நடந்த திடீர் குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகி,  600 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கினியா நாடானது கடந்த 1968-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுள்ளது. அந்த நாட்டில் சுமார் 13 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இதனையடுத்து கினியாவில் ராணுவ முகாம் ஒன்று நடைபெற்று வருகின்றது. அந்த முகாமில் சம்பவத்தன்று மாலை திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி  அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்த 600 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அந்நாட்டு பிரதமர் ராணுவ முகாமில் டைனமைட்டை என்னும் வெடிபொருளை ராணுவ வீரர்கள் கையாளும் போது தவறுதலாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |