Categories
உலக செய்திகள்

4கொலை செய்த தாய்…! விடுதலை செய்ய சொல்லி…. ”90ஆய்வாளர்கள்” மனு தாக்கல் – ஆஸியில் பரபரப்பு சம்பவம்…!!

ஆஸ்திரேலியாவின் நான்கு குழந்தைகளை கொன்ற தாய்க்கு விடுதலை வழங்க வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1990-க்கும் 1999-க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேத்லீன் ஃபோல்பிக் என்பவர் தனது 4 குழந்தைகளை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலேப், பேட்ரிக், சாரா மற்றும் எலிசபெத் ஆகிய நான்கு குழந்தைகளை அடுத்த காலகட்டத்தில் கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து,  7  வார விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று 90 விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ குழு வல்லுநர்கள் அடங்கிய குழு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மருத்துவ குழு வல்லுநர்கள் தாக்கல் செய்த மனுவில்,  இரு குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து CALM2 எனப்படும் மரபணு மாற்றத்தை பெற்றவர்கள். CALM2 மரபணு மாற்றம் மாரடைப்பு ஏற்பட்டுத்தி திடீர் மரணத்தை ஏற்படுத்தும். மற்ற இரு குழந்தைகள் மரபணுக்கள் வேறுபட்ட மரபணு மாற்றத்தை கொண்டிருந்தனர் எனவும்,  அது தான் அவர்களின் இறப்புக்கு காரணம்,  ஃபோல்பிக் ஒரு அப்பாவி எனவும்,  அவர் கொன்று விட்டதாக கூறும் நான்கு குழந்தைகளும் மரபணு மாற்ற நோயினால் தாக்கப்பட்டு இறந்தனர் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.

குழந்தைகளின் முழு மரபணு வரிசைமுறை அடிப்படையாகக்கொண்டு அவர் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் ஃபோல்பிக்கு எதிரான அநீதியை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாவிட்டால் அது மனித உரிமைகளுக்கு எதிரானது. அவரது குழந்தைகள் இறந்தபோது சூழ்நிலைகள் அடிப்படையாகக் கொண்டு தான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும்,  கொலை போன்ற தீவிரமான குற்றங்களுக்கு ஆதாரங்கள் மட்டுமே வைத்து தண்டனை வழங்க முடியாது எனவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |