முதலாம் உலகப் போரில் பிரிட்டனுக்காக போரிட்ட இந்தியப் படைவீரர்களை கவுரவிக்கும் விதமாக சீக்கியப் போர் விமானியான ஹர்தீத் சிங் மாலிக்கிற்கு பிரிட்டனில் நினைவு மண்டபம் கட்டப்படவுள்ளது.
முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இந்தியர்களில் சீக்கிய சமூகத்தினர் அதிகமானோர் பங்களித்தனர். அவர்களை அங்கீகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு சீக்கிய சிப்பாயின் சிலை பிரிட்டன் நகரின் கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன் கம்யூனிட்டி ஹாம்ப்ஷயர் & டோர்செட் (OCHD) அமைப்பால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் போரில் பங்களித்த சீக்கிய வீரர்களை அங்கீகரிக்கும் விதமாக நினைவு மண்டபம் கட்டவேண்டும் என்று கூறப்பட்டது.
ரோயல் பறக்கும் படையில் முதல் இந்திய விமானியாக பறந்த ஹர்தீத் சிங் மாலிக் முதலாம் உலகப் போரில் ஆங்கிலேயர்க்காக போராடியதால் சௌதாம்ப்டன் நகர சபை அவருக்கு நினைவகத்தை வடிவமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து OCHDன் நிறுவனர் ப்ரதீபால் இந்த நினைவகம் பிரிட்டனில் வாழும் சிக்கிய இளைஞர்களுக்கு அவர்களின் பாரம்பரியத்துடன் இணைவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.