Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ் கார் வாங்கிட்டாரு… பாலா இன்னும் வாங்கலையே… இணையத்தில் பரவிய மீம்ஸ்… பதிலடி கொடுத்த புகழ்…!!

இணையத்தில் வெளியான ரசிகர்களின் மீம்ஸுக்கு புகழ் அளித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழ் தனது நகைச்சுவை திறமையால் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இருந்துள்ளார்.

அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சிரிப்புடா” நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்பு படிப்படியாக உயர்ந்து தற்போது அனைவரும் பாராட்டும் நல்ல நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு காரை வாங்கியுள்ளார். அதனை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

இதனை பார்த்த பலரும் புகழ் கார் வாங்கி விட்டார், ஆனால் பாலா இன்னும் கார் வாங்கவில்லையே? என்று மீம்சை உருவாக்கி இணையத்தில் பரப்பி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புகழ் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த கார் பாலாவோடதும் தான். நாங்க ரெண்டு பேரும் வேற வேற இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் ஒற்றுமையை பார்க்கும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |