பரத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார்.
பிரபல சீரியல் நடிகையாக இருந்த வாணி போஜன் “ஓ மை கடவுளே” படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் வாணி போஜன் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இதை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், சியான் 60, உள்ளிட்ட ஏராளமான படங்களை வாணி போஜன் தற்போது கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபல நடிகர் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.