Categories
தேசிய செய்திகள்

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட பெண்கள்… ராகுல் காந்தி வாழ்த்து….!!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாற்று சாதனைகளை படைக்கும் திறமை கொண்டவர்கள் பெண்கள். நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவர்கள் பெண்கள். பெண்கள் சாதனைகள் படைப்பது எந்த சக்தியும் தடுத்து நிறுத்த அனுமதித்து விடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |