உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் சுண்டைக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள்,கீரைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சிலர் பலவிதமான உணவுகளை சாப்பிடுவதால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. அதன் பிறகு அந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு மிகவும் அவதிப்படுகிறார்கள்.
அவ்வாறு உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு சுண்டைக்காய் அருமருந்தாக அமைகிறது. சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை குணமாகும். சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.