Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நாடகமாடிய கள்ளகாதலன்… இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து டிரைவர் கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெனவேடு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் நார்த்தவாடா கிராமத்தில் வசித்து வரும் ராஜ்குமார் என்ற பொக்லைன் எந்திர வாகன டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது பிரியங்கா கோபத்தில் பழையனூர் கிராமத்தில் உள்ள தனது தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால் அவர் தனது கள்ளக்காதலன் ராஜ்குமாருடன் நார்த்தவாடா கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கியுள்ளார். அப்போது பிரியங்காவிற்கும், ராஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பிரியங்கா அங்கிருந்து வெளியேறி வெங்கல் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அங்கு சென்று பிரியங்காவை சமாதானப்படுத்தி ராஜ்குமார் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் ராஜ்குமார் பிரியங்காவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பிரியங்காவை அவரின் புடவையால் கைகளை கட்டிப்போட்டு, விஷம் கலந்த குளிர்பானத்தை அவரது வாயில் ஊற்றி விட்டார். இதனால் பிரியங்கா மயங்கி விழுந்த பிறகு ராஜ்குமார் பிரியங்காவின் தோழி பவித்ரா என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பிரியங்கா விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதன்பின் ராஜ்குமாரும், பவித்ராவும் இணைந்து பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவாலங்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது ராஜ்குமார் பிரியங்காவை கொலை செய்தது உறுதியாகி விட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |