நேர்காணல் நிகழ்ச்சியில் மெர்க்கெல் அணிந்திருந்த ஆடையின் விலை 3,27,429 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹரி. இவர் அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கெல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் அரச குடும்ப பொறுப்புகள் தனக்கு வேண்டாம் என்றும், அதிலிருந்து விலகுவதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் ஹரியும்- மெர்க்கலும் இங்கிலாந்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மேகன் இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதற்கு இடையில் ஹரி-மேகன் தம்பதியர் குறித்து இங்கிலாந்து நாளிதழ்களில் கடும் விமர்சனத்திற்குள்ளான செய்திகள் வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதில் மெர்க்கெல் கருப்பு நிற உடை ஒன்று அணிந்திருந்தார் . அந்த உடை அனைவருக்கும் பிடித்துள்ளது. காரணம் அதன் வடிவமைப்பு தான். அந்த ஆடையில் “V ” வடிவ கழுத்து இருந்தது. மேலும் வெள்ளை நிறத்தில் அழகாக எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது.
அதில் பெல்ட் ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. கர்ப்ப காலத்தில் பெண்கள் பெண்களுக்கு ஏற்ற ஆடையாக அது இருந்தது. அந்த ஆடைக்கு அழகு சேர்க்கும் வகையில் மெர்க்கலும் அதற்கு ஏற்றவாறு பிரேஸ்லெட் மற்றும் நெக்லஸ் அணிந்திருந்தார். அனைவரையும் ஈர்த்த அந்த ஆடையின் மதிப்பு 3,27,429 ரூபாய் இருக்கும் என்று ஆடை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.