Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தால்….. மாதம் ரூ.1000 வழங்கப்படும்…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு …!!

திருச்சி சிறுகனூரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழுக்கம் மாநாடு நடைபெற்றது. இதில்  பேசிய முக ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மே 2 ந்தேதி தமிழகத்திற்கான புதிய விடியல் பிறக்கும். வறுமையில் வாடும். 1 கோடி பேரை மீட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.

தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்திற்கும் மேலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 35 லட்சம் கோடியை தாண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும். தமிழகத்தின் முக்கியமான 7 துறைகளை வளர்த்தெடுப்பதே திமுக ஆட்சியின் நோக்கம். கல்வி, சுகாதாரத்திற்கு செலவிடப்பட்டு வரும் நிதி மூன்று மடங்கு உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |