Categories
உலக செய்திகள்

புர்கா அணிய தடையா…? மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திய சுவிட்சர்லாந்து அரசு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை முழுவதும் மறைக்க கூடிய ஆடைகளை அணிவதற்கு தடை விதிப்பது குறித்து பொது மக்களிடேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் உள்ள பொது இடங்களில் பெண்கள் முகத்தை முழுவதும் மறைக்கும் படியான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் உடையான புர்காவிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே நடவடிக்கையை  சுவிட்சர்லாந்தில் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொது மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தலாமா? வேண்டாமா? என்று சுமார் ஒரு ஆண்டிற்கும் மேலாக விவாதங்கள் நடத்தப்பட்டது. அதற்கு பிறகு முகத்தை முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிவதை தடை செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆனால் அதில் பெரும்பான்மையானவர்கள் அப்படி ஒரு தடையை விதிக்கக் கூடாது என்று வாக்களித்தனர். ஒருவேளை இந்த தடை  அமலுக்கு வந்து விட்டால் அதற்கு சில விலக்கும் உண்டு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் குடிமக்களில் 5.5 % மக்கள் இஸ்லாமியர்கள் தான். எனவே இந்த தடை அமலுக்கு வரக்கூடாது என்று இஸ்லாமிய பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் குறிப்பிட்ட சிலர் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |