டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 102 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெருந்துறையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மத்தியில் டிராக்டர் பேரணி, உண்ணாவிரதம் மற்றும் பொது முடக்கம் என பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. டெல்லி, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் பல்வேறு விவசாய சங்கங்கள் மையமிட்டுள்ள நிலையில், போராட்டம் 100வது நாளை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் நூறாவது நாளை போராட்டம் எட்டி உள்ள நிலையிலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் ராஜ்பீர் சிங் என்ற விவசாயி இன்று தற்கொலை செய்து கொண்டார். அதனால் போராட்டக் களத்தில் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 284 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மார்ச் 13ஆம் தேதி விவசாயிகள் மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.