காரைக்குடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது ஆவணமில்லாத ரூ.1 1/4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்துள்ளனர்.
அந்த சோதனையானது தேர்தல் கண்காணிப்புக்குழு தாசில்தார் நேரு தலைமையில் நடைபெற்றுள்ளது. அப்போது அவ்வழியாக மதுரை நோக்கி வந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த காரில் சோதனை மேற்கொண்டபோது ரூபாய் ஓரு லட்சத்து 25 ஆயிரத்து 500 பணம் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.