Categories
உலக செய்திகள்

பொது இடத்தில்… “அநாகரீக செயலில் ஈடுபட்ட போலீஸ்”… பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள்..!!

கனடாவில் பொது இடத்தில் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கனடாவில் உள்ள விட்பை என்ற நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடத்தில் யாரோ ஒரு நபர் காரை நிறுத்தி விட்டு அதற்கு அருகில் நின்று கொண்டு பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் விட்பை நகருக்கு விரைந்து சென்று தவறான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த நபரை கைது செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் , அந்த நபரின் பெயர் ராயல் வால்டர்ஸ் என்பதும் அவரும் ஒரு காவல்துறை அதிகாரி தான் என்பதும் தெரியவந்தது. இதனால் ராயல் வால்டர்ஸை  மேலதிகாரிகள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். பொது இடத்தில் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் அநாகரீக செயலில் ஈடுபட்டது ஒரு காவல்துறை அதிகாரி தான் என்பதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |