Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர விழிப்புணர்வு… வருவாய் ஆய்வாளர் செயல்முறை விளக்கம்..!!

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. மக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு வாக்களிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது. அந்த விழிப்புணர்வை வருவாய் ஆய்வாளர் ரமேஷ் செயல்படுத்திக் காட்டியுள்ளார். அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொது மக்கள் ஓட்டு போடுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து அதனை தெரிந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |