Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்திற்கு முன்பு, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சிம்சன் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் கோபிகணேசன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார்.

இதில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் காசிநாதன், இயற்கை விவசாய சங்க பொருளாளர் ராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், பொருளாளர் வைரவன் ஆகிய பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று சட்டங்களையும் திரும்ப பெறக் கோரியும், டெல்லியில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், விவசாயிகளை அழைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் நடத்தபட்டுள்ளது.

Categories

Tech |