தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் திமுகவினரும், அதிமுகவினர் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டும் விமர்சனம் செய்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகிறது.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமலுக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு 2புல் பாட்டில்களை மேல் விற்பனை செய்யக்கூடாது என்று மதுக்கடை அதிகாரிகள் பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஒரு நபருக்கு ஒரு முறைக்கு மேல் மதுபானம் வழங்கக்கூடாது. அவர்கள் கூடுதலாக கேட்டால் அந்த நபர் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.