Categories
உலக செய்திகள்

உலகிலேயே இதுதான் முதல் முறை… “மனித குரங்குகளுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி”…!!

அமெரிக்காவின் பிரபல மிருகக்காட்சி சாலையில் உள்ள 9 குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பிரபல மிருகக்காட்சிசாலையில் ஒன்பது குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த 9 குரங்குகளில்  4 குரங்குகள் ஓரங்கட்டான்  வகையைச் சேர்ந்தவை. மீதமுள்ள  குரங்குகள் bonobo வகையை  சேர்ந்தவை.

இந்த ஒன்பது குரங்குகளுக்கும்  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியில் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. எதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியுமா? நடப்பாண்டு ஜனவரி மாதம் இந்த மிருகக்காட்சி சாலையில் ஊழியர்களிடமிருந்து அங்குள்ள 8 கொரில்லாக்களுக்கு கொரோனா பரவியதாக தகவல் வெளியானது. இதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கால்நடை நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி குரங்குகளுக்கு போடுவதற்கு முன்பாக பூனை மற்றும் நாய் மீது செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |