ராமநாதபுரத்தில் அரசு பணியாளர்களுக்கு கொரோன தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது .
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நேரத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கொரோன தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு ,தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ராமநாதபுர மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலரான சத்தியமூர்த்தி ,தன் முதல் கட்ட தடுப்பூசியை ,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கொரோன தடுப்பூசியைசெலுத்த உள்ளனர்.
அவர்கள் பணியாற்றும் இடங்களிலுள்ள ,ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வருகின்ற 10.03 2021 தேதிக்குள் ஆட்சியரின் அறிவுரைப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு,முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். இதற்கு முன்னோடியாக மாவட்டக் கல்வி அலுவலரான முத்துசாமி மற்றும் முதன்மைக் கல்வி ஆய்வாளரான சத்தியமூர்த்தி ஆகியோர் ,நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்கள்.,