ஜியோ நிறுவனம் ஜியோ புக் என்ற மலிவு விலை லேப்டாப்களை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தொலை தொடர்பு சேவையில் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது ஜியோ நிறுவனம். அதற்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு எல்லாம் அசராமல் ஜியோ தினந்தோறும் ஏதாவது ஒரு புதிய அப்டேட் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
அதன்படி ஜியோ புக் என்ற மலிவு விலை மடிக்கணினியை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் இந்த லேப்டாப் அறிமுகமாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கமான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாமல் ஜியோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த லேப்டாப் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.