Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

BREAKING: இந்திய அணி அபார வெற்றி… பைனலில் நியூசிலாந்துடன் மோதல்…!!!

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 135 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அக்சர், அஸ்வின் தலா 5 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து ஜூன் மாதம் லண்டனில் நடக்கவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்திய அணி மோதுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 72.2 சராசரியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து அணி 70.0 சராசரியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவுடனான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வென்றால் மட்டுமே ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு அந்த வாய்ப்பு பறிபோனது.

Categories

Tech |