Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி வீடியோ! பயணிகளுக்கு குடிநீர்…. பாத்ரூமிலிருந்து வருகிறது…. கண்டிப்பா இதை பாருங்க…!!

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த குடிநீர் எங்கிருந்து வருகிறது? என்பது நமக்கு தெரியாது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவானது தான் என்று நினைத்து நாமும்  அதை குடித்து வருகிறோம். ஆனால் இந்த தண்ணீர் பயணிகளுக்கு சுகாதாரமானதாக இருக்குமா? இருக்காதா? என்று சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கரோத் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் தொட்டி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அந்த குடிநீர் தொட்டிக்கு கழிப்பறையிலிருந்து பைப் மூலமாக தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்படும் வீடியோ மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு மினரல் வாட்டர் குடிக்கும் அரசு அதிகாரிகள் பயணிகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருப்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

https://youtu.be/wbZBR_zP6cc

Categories

Tech |