தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் உட்பட ஐந்து மாநில தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
5 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் எம்.எல் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் மார்ச் 9 ஆம் தேதி விசாரிக்கிறது.